இந்தோனேஷியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுமத்திரா தீவின் மேற்குப் பகுதியில் சுனாமி ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.