Contact Form

Name

Email *

Message *

சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரத்திலுள்ள திருத்தங்கள் இருப்பின் அறிவிக்கவும்..

இம்முறை கல்விப் பொதுத் தாரதர சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்கள் இருப்பின், அதுகுறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னதாக அறியத்தருமாறு பரீட்சைகள் த…

Image
இம்முறை கல்விப் பொதுத் தாரதர சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்கள் இருப்பின், அதுகுறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னதாக அறியத்தருமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனுமதிப்பத்திரங்களில் காணப்படும் திருத்தங்கள் தொடர்பில் திணைக்களத்தின் பாடசலைகளுக்கான பரீட்சைப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்புகுமார கூறியுள்ளார். இதன்பொருட்டு 1911 அல்லது 0112 784 208 அல்லது 0112 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சையின் சகல அனுமதிப்பத்திரங்களும் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.சாதாரண தரப் பரீட்சைக்காக இம்முறை 6,64537 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.இவர்களில் 403442 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You may like these posts