Contact Form

Name

Email *

Message *

இணையத்தளங்கள் தொடர்பில் இளம்பராயத்தினர் சரியாக அறிந்து கொண்டுள்ளனரா?

அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு, இணையத்தளங்கள் உற்ற நண்பனாகிவிட்டன. 1999 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்த பெரும்ப…

Image
அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு, இணையத்தளங்கள் உற்ற நண்பனாகிவிட்டன.
1999 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்த பெரும்பாலும் பணிக்குச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள், செல்போன்கள் மற்றும் கணினிகளுடனேயே தமது காலத்தைக் கழிக்கின்றனர்.
இங்கிலாந்தின் தொலைதொடர்பு ஆணையமொன்று 12 முதல் 15 வயதினரிடையே நடத்திய கணக்கெடுப்பில் 50% குழந்தைகள், தேடுபொறி அளிக்கும் பதில்களை ஆராய்ந்து உண்மையானவற்றை அறிந்துகொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் சுமார் 20 % இணையதளங்களில் படிக்கும் அனைத்து தகவல்களையும் உண்மை என ஆணித்தரமாக நம்புவதாக தெரியவந்துள்ளது. எனினும், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
மேலும், வலைத்தளங்களில் எழுதுவோர் சிலர், குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி புகழ்ந்து எழுதுவதற்கு அந்த நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு இவ்வாறு நடந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் இந்தத் தலைமுறையினர் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நேரில் பழகுவதைக் காட்டிலும் இணையதளங்களில் பேசும்போது வித்தியாசமான அணுகுமுறையுடன் பலரும் நடந்துகொள்வதை இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற பத்தில் ஏழு இளம்பருவத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

You may like these posts