Contact Form

Name

Email *

Message *

இலங்கையின் வட்டி வீதங்களில் தொடர்ந்தும் மாற்றமில்லை: மத்திய வங்கி.

இலங்கை மத்திய வங்கி தற்போதைய நிதிக்கொள்கையின் அடிப்படையிலான வட்டி வீதங்களை தொடர்ந்தும் ஒரே விதமாகப் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் சேமிப்பிற்கான வட்டி வ…

Image
இலங்கை மத்திய வங்கி தற்போதைய நிதிக்கொள்கையின் அடிப்படையிலான வட்டி வீதங்களை தொடர்ந்தும் ஒரே விதமாகப் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் சேமிப்பிற்கான வட்டி வீதம் 6 ஆகவும் கடனுக்கான வட்டி வீதம் 7.50 ஆகவும் பேணப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கைகளுடன் இணைந்து வௌிநாட்டு இறக்குமதிகளை குறைக்கும் வண்ணமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுற்றுலாத்துறை மூலமாக பெறப்படும் வருமானம் 17.9 வீதத்தினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் 1.8 வீத அதிகரிப்பையும் காட்டுகின்றது.

எனினும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts