திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு விழவானது 2015.10.26 அதாவது திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு வித்தியாலய அதிபர் ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி்ப் பணிப்பானர் திரு.சு.சுகிர்தராஜன் அவர்களும் பொத்துவில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.வ.ஜயந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு ஆலய அர்ச்சகர்களும் பங்குத்தந்தையர்களும் பெருமளவிளான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பாடசாலையில் கடந்த வருடம் மற்றும் இவ்வருடம் பல்வேறு துறைகளில் க.பொ.சாதாரணதரம் , உயர் தரம் மற்றும் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை , விளையாட்டு போன்றவற்றில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு இவ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் அ.நிசாந்தன் கணக்காய்வாளர் பரீட்சையில் சித்திபெற்றதையிட்டு கௌரவிக்கப்பட்டார்.







