நேற்று நிறைவடைந்த தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையூடாக நாடளாவிய ரீதியில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 114,805 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நாடலாவிய ரீதியில் 543,353 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவற்றுள் 21% இடங்கள் நுளம்பு பரவக் கூடிய வகையில் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹசித திஷேரா தெரிவித்துள்ளார்.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நுளம்பு பரவக்கூடிய 19,163 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!