தேசிய போதைப்பொருள் தடுப்பு செயலணி, காலி நகர சபை மண்டபத்தில் நடத்திய தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்றம் இணங்கினால் மரணதண்டனை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குற்றவியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொடதெனியாவில் 5 வயது சிறுமி படுகொலைச் செய்யப்பட்டதன் பின்னர், மரணதண்டனையை நிறைவேற்றுமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு முன்னரும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் மரணதண்டனை நடைமுறையில் இருக்கின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!