அம்பாறைமாவட்ட தமிழரசுக் கட்சி சார்பாக தம்பிலுவில்மத்திய சந்தைக்கருகில் நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும் போது 10ம் இலக்கத்தில்போட்டியிடும் சிந்தாத்தரை ஜெகநாதன்அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏகோபித்துஒரே அணியில் நின்றுவாக்களிப்பார்களாயின், இம் முறை இரண்டுபாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.சகோதர இனங்கள் பலமானவர்கள் மத்தியில்போட்டியிடுகின்ற காரணத்தினால் அவர்களின்பிரதிநிதித்துவம் குறைவதற்கான நிகழ்தகவுச்சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு என்பதில்ஐயம் இல்லை என்றேகூறவேண்டுமென்கிறார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போதுதமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமையினை,வாக்களிக்கும் சுதந்திரத்தினை தமிழரசுக்கட்சிக்கு வழங்கி தமிழர்கள் எங்கும்எப்போதும், யாருக்கும் சோரம் போகாததன்மையை வெளிப்படுத்துவதன் மூலம்தேசத்திலும், சர்வதேசத்திலும் வதியும்மக்களுக்கு புடம் போட்டுக் காட்ட வேண்டியதருணத்தில் தமிழ் மக்களின் தார்மீகக்கடமை உண்டு என்பதை நன்கு புரிந்துவெளிப்படுத்தல் வேண்டு மென்கிறார்.
தொடர்ந்து உரையாற்றும் போது உகந்தைமலை முருகனுக்கு சொந்தமான காணிஇரண்டு ஏக்கர் சகோதர இனத்தில் உள்ளமதகுரு ஒருவரால் முறையற்ற செல்வச்சேர்க்கை அடைவதற்கானபகீரதப்பிரயத்தனம்மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றை தடுத்துநிறுத்தி என்னால் ஆன சகல வழிவகைகளையும் மேற்கொள்ளப் பின்னிக்கப்போவதுமில்லை அஞ்சுவதுமில்லை என்வாழ்க்கையில் நான் கடைப்பிடிக்கின்றவிடயம் யாதெனில் “நாடு என்ன தெய்ததுஎனக்கு என்று கேட்பதை விட நாட்டுக்காகநான் என்ன செய்தேன் என்று கேட்பதாகும்."
இக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் சோ.பாக்கியராஜா, ச.பேரம்பலம் , முன்னால் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வடிவேல் மற்றும் வேட்பாளர்அன்னம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.திருமதி அன்னம்மா கருத்து தெரிவிக்கையில்தமிழ்மக்கள் அனைவரும் அதிகாலையில்எழுந்து வாக்குச் சாவடிக்குச் சென்றுவாக்களிக்க வேண்டுமென்றார்.
இப் பொதுக் கூட்டத்தில் பொத்துவிலைச்சேர்ந்த ஜனாப் எஸ்.எம்.காதர் அவர்கள்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்எங்கள் வேட்பாளர் சிந்தாத்துரைஜெகநாதனுக்கு தமிழ் மக்கள் மாத்திரமல்லசகோதர இனமான முஸ்லீம், சிங்கள மக்கள்தனிப்பட்ட ஜெகநாதனுக்கு வாக்களிக்கக்காத்துக் கொண்ருக்கின்றனர் எனக்கூறியதோடு ஏலவே பதில் நீதவானாகக்கடமையாற்றுகின்ற எமது வேட்பாளர்,நிரந்தர நீதவானுக்கான இவ்வருட நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் வந்திருந்தும் அதற்குதோற்றாது தன் வாழ்நாளை சகல இனமக்களுக்காகவும் சேவை செய்யப்புறப்பட்டுள்ளார் என்பது வாஸ்தவமே என்றுகூறினார்.