Contact Form

Name

Email *

Message *

தேர்தல் பிரசார பதாதைகள் யாவும் 15ஆம் திகதி அகற்றப்படவேண்டும்

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யா…

Image
பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

தேர்தல் மாவட்டத்திற்காக நிறுவப் பட்ட முடிந்த ஒரேயோரு மத்திய அலுவலகத்தில் மாத்திரம் கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னத்துடன் கூடிய பிரசார பலகை காட்சிப்படுத்த முடியும். வேட்பாளர்களின் இலக்கங்களுடன் கூடிய சகல பிரசாரங்களும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் நீக்கப்பட வேண்டும்.

பிரசாரப் பலகைகள் அகற்றப்படுவதுடன் மாத்திரமன்றி அன்றையதினம் நள்ளிரவுமுதல் அவ்வாறான காரியாலயங்களில் கட்சியை அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதனை மீறும் வகையிலான பிரசாரங்கள் அகற்றப்படுவதுடன், அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

You may like these posts

Comments