இலங்கையில் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமான உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மாகோற்சவம் கடந்த 17.07.2015ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று 16ம் நாளாகிய நேற்று 01.08.2015ம்திகதி (சனிக்கிழமை) உகந்தை சமுத்திரக்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. அதிகாலை 5.00மணியளவில் ஆரம்பமான முருகப் பெருமானின் பூசை நிகழ்வுளை தொடந்து சுவாமி வள்ளி தெய்வானை சமதேராய் உள்வீதி வலம் வருதல், வெளி வீதி வலம் வருதல் என்பன இடம்பெற்றது.
இறுதியாக எம்பெருமான் சமுத்திரக்கரையை நோக்கி சென்று அங்கு விஷேட அபிஷகங்களை அடுத்து தீர்த்தோற்சவம் இடம் பெற்றதை தொடர்ந்து ஆலயத்துக்கு சென்று பூசைகள் நிறைவடைந்ததும் அண்ணதான வைபவத்துடன் இனிதே நிறைவேறியது.









Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!