ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பப்பட்ட வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆள் அடையாளத்தை உறுதி செய்து பெற்றுக்கொள்ளலாம் என தபால் ஆணையாளர் ரோஹன ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்ய தேசிய அடையாள அட்டை சமர்ப்பித்தல் அவசியம் என்றும் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகள் ஏலவே தபாலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!