Contact Form

Name

Email *

Message *

உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை (04) ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்…

Image

நாளை (04) ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சை கடமைகளில் 22,000 பேர் ஈடுபட்டுள்ளனர். 309,069 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். அவர்களில் 236,072 பேர் பாடசாலை ரீதியாகவும் 72,997 பேர் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பித்துள்ளனர்.
நாடுபூராவும் 2180 பரீட்சை மத்திய நிலையங்களும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may like these posts