காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ள வாக்களிப்பினைத் தொடர்ந்து இரவு 07.00 மணியளவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கும்.
இதன்பிரகாரம், நாளை இரவு 11.00 மணியளவில் முதலாவதாக தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது