அம்பாறை, பக்கிஎல்ல - வெல்லாவெளி வீதிக்கு அருகில் குழாய்நீர் விநியோகத்துக்காக அகழி தோண்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் குண்டொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பக்கிஎல்ல பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டு மீட்கப்பட்டது. இது பழைய மோட்டார் குண்டு என்றும் விடுதலைப் புலிகள் இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் இக்குண்டை புதைத்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறையில் மோட்டார் குண்டு மீட்பு
அம்பாறை, பக்கிஎல்ல - வெல்லாவெளி வீதிக்கு அருகில் குழாய்நீர் விநியோகத்துக்காக அகழி தோண்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் குண்டொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்ட…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!