Contact Form

Name

Email *

Message *

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 180 பேர் கைது

நாடளாவிய ரீதியில் தேர்தல்கள் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பில் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெ…

Image
நாடளாவிய ரீதியில் தேர்தல்கள் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பில் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெற்று வரும் தேர்தல்கள் குறித்த சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளின் பிரகாரமே 180 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் சுற்றிவளைப்புக்கள் மற்றும் முறைப்பாட்டு விசாரணைகள் உள்ளிட்ட 120 சம்பவங்கள் தொடர்பில் இந்த 180 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். இதில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெற்ற 65 சுற்றிவளைப்புக்களில் 156 பேரும் 56 முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
இதனிடையே தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 541 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கின்றது. பதவிகள் வழங்கப்பட்டமை, பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை மற்றும் இடமாற்றங்கள் உள்ளிட்டவை தொடர் பில் இதில் 145 முறைப்பாடுகள் அடங்குவதாகவும் இதனை விட சுவ ரொட்டி ஒட்டுதல், பொருட்களை விநியோகித்தல் போன்ற முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த பிரிவு மேலும் குறிப்பிட்டது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலான அதிக முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது. கொழும்பிலிருந்து 86 முறைப்பாடுகளும் பதுளையிலிருந்து 42 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டையில் இருந்து 29 முறைப்பாடுகளும் தமக்கு இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த பிரிவு மேலும் குறிப்பிட்டது.
இதேவேளை 26 வன்முறைச் சம்பவங்கள் அடங்கலாக 536 தேர்தல்கள் தொடர்பிலான சட்டமீறல்கள் தொடர் பில் தமக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே குறிப்பிட்டது. கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் இந்த தகவலைத் தெரிவித்தார்.
இதனைவிட பெப்ரல் அமைப்புக்கு நேற்று பகல் வரை 398 முறைப்பாடு கள் கிடைக்கப் பெற்றதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

You may like these posts

Comments