Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி

[NR] தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் அணிக்கு 11ஒருவர் கொண்ட 10 ஓவர்கள்  மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது கடந்த 07.10.2017…

Image
[NR]

தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் அணிக்கு 11ஒருவர் கொண்ட 10 ஓவர்கள்  மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது கடந்த 07.10.2017 சனிக்கிழமை ஆரம்பமாகியது.  இப்  போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி 22.10.2017  நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது இவ்வருடம்(2017)ல் தரம் ஐந்து புலமைபரிசில்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.

இப் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கேடயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தார்.

இத்தொடரின் இறுதிப் போட்டி அக்கரைப்பற்று யங் ஸ்டார் அணிக்கும் மற்றும் தம்பட்டை இலவன் ஸ்டார் அணிக்கும் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய  யங் ஸ்டார் அணியினர் 9.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டினையும் இழந்து 66 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். பதிலுக்கு எதிர்த்தாடிய  இலவன் ஸ்டார் அணியினர் 4 ஓவர்களில் ஒன்பது விக்கட் கைவசம் இருக்க 67 ஓட்டங்களை பெற்று  வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக  தம்பட்டை இலவன் ஸ்டார்  அணியின் கே.உவேஷ், தொடர் ஆட்டநாயகனாக தம்பட்டை இலவன் ஸ்டார் அணியின் எம். ராஜேஷ் தெரிவு செய்யப்பட்டனர். அதிவேக ஆறு ஓட்டங்களை பெற்ற  தம்பட்டை இலவன் ஸ்டார் அணி வீரர் எம். ராஜேஷ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.  மேலும் இத்தொடரின்  சிறந்த பந்துவீச்சாளராக தம்பிலுவில் ரெண்சஸ் அணியின் சனு தெரிவு செய்யப்பட்டார் .



































































You may like these posts

Comments