அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த நோன்புக் காலத்தில் மந்தகதியில் இடம்பெற்று வந்த தேர்தல் நடவடிக்கைகள் யாவும் பெருநாள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று தமக்கு ஆதரவாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இங்குள்ள 54 தமிழ் கிராமங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பலரும் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதிலே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரை இம்முறை பொத்துவில் தொகுதியிலா? கல்முனைத் தொகுதியிலா? பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்யப்படவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிக் காணப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!