Contact Form

Name

Email *

Message *

வீட்டுக்கு வருகிறது வாக்காளர் அட்டை

பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29ஆம் திகதி விநியோகத்து க்காக தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட…

Image

பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29ஆம் திகதி விநியோகத்து க்காக தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.


ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை தபால் திணைக்களத்தால் வாக்காளர் அட்டைகள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படவுள்ளது. ஓகஸ்ட் 2ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதி ஆகியன ஞாயிற்றுக்கிழமைகளாக இருக்கின்றபோதும் இரு தினங்களும் விசேட தினங்களாகக் கணிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தபால் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

ஓகஸ்ட் 10ஆம் திகதிவரை அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களுடன் சென்று தமக்கான அஞ்சல் நிலையத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 


You may like these posts

Comments