முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு புதிதாக 4500 பேரை இணைத்துக்கொள்வதற்கு அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கடந்த முறை இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் முகாமைத்துவ உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் விரைவில் தமக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முகாமைத்துவ உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்படுகின்றவர்களை பயிற்சியின் பின்னர் வெற்றிடம் நிலவும் அரச நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு புதிதாக 4500 பேரை இணைத்துக்கொள்ளத் திட்டம்
முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு புதிதாக 4500 பேரை இணைத்துக்கொள்வதற்கு அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த முறை இடம்பெற்ற போட்டிப் பரீ…