இதுவரைகாலமும் கிறேட் பாலர்பாடசாலை(Great Kindergarten) எனும் பெயர்கொண்டு இயங்கிவந்த பாலர்பாடசாலையானது பெயர்மாற்றம் பெற்று குருதேவர் பாலர்பாடசாலை(Gurudeva Kindergarten) எனும் பெயருடன் இப் புதிய 2015ம் ஆண்டின் கல்விப்பயணதினை ஆரம்பிக்கின்றது.
இதன் அங்குராற்பண நிகழ்வாக 2015ம் ஆண்டின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது. தம்பிலுவில் தம்பிமுத்து வீதியில் அமைந்துள்ள குருதேவர் பாலர்பாடசாலையில் 2015.01.21ம்திகதி புதன்கிழமை நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது இன் நிகழ்வின் போது புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் மலர்செண்டு கொடுத்து அன்பாக வரவேற்றனர்.









