Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் அமரர் இராசையா சாம்பசிவம்

திரு இராசையா சாம்பசிவம் (ஓய்வு நிலை கணக்காளர், சமாதான நீதவான், அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்)

Image
          திரு இராசையா சாம்பசிவம்
(ஓய்வு நிலை கணக்காளர், சமாதான நீதவான், அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்)


அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும்   இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன ஓய்வுபெற்ற கணக்காளரும், சமாதான நீதிவானும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரும் ஆகிய திரு இராசையா சாம்பசிவம் அவர்கள் 17/01/2015 சனியன்று காலமானார்

அன்னார் காலம்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை புதல்வரும்,   இரா.தேவராஜா (முன்னாள் தபாலதிபர்) திருமதி கணேஸ்வரி வன்னியசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு சகோதரரும் 


ஜயந்தன், சுவேந்திரன், ஜயந்தினி, சுகந்தினி, பவகரன், பவானந்தன், குகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

சிவகாந்தன், சிவவதனி, சிவகரன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் தம்பிலுவில் இந்து மயானத்தில்  நடைபெறும்

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவர்க்கும் அறியத்தருகிறோம்.


தொடர்புகட்கு:

ஜயந்தன்     -   0094 775024968
பரம்சோதி    -   0094 774432892

You may like these posts