தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 2015.01.21ம்திகதி புதன்கிழமை காலை 9.00மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.சிறிகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.இன் நிகழ்வின் போது புதிதாக தரம் 1 ற்கு இணையும் மாணவர்களை முன்பு தரம் 1ல் கற்ற மாணவர்கள் மலர்மாலை அணிவித்து பாடசாலைக்கு அன்பாக வரவேற்றனர். இன் நிகழ்வின் பொது சிறப்பு அதிதியாக தாண்டியடி கிராம உத்தியோகத்தர் திரு.கண. இராஜரெத்தினம் அவர்களும் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.







