தம்பிலுவில் சுவாட் கலைமகள் அம்மன் முன்பள்ளியின் விடுகை விழாவானது சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிராந்திய பொறுப்பாளர் திருமதி.S.புஸ்பராணி அவர்களின் தலைமையில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலத்தில் அண்மையில் இடம்பெற்றது.இன்நிகழ்வில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் மற்றும் திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.V.ஜெயந்தன், சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் வலய முன்பள்ளி ஒருங்கினைப்பாளர் திரு.S.தர்மபாலன், திருக்கோவில் வலய யுனிசேப் ஒருங்கினைப்பாளர் திரு.G.விநாயகமூர்த்தி, தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு.S.இரவீந்திரன், அதிதிகளாக மேற்பார்வை உத்தியோகத்தர் பொதுசுகாதாரபரிசோதகர் திரு.K.லோகிதகுமார், திருக்கோவில் வலய முன்பள்ளி முகாமைத்துவ உதவியாளர் திரு.P.மோகனதாஸ் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்விகள் சிறப்பாக இடம் பெற்றது.


























