தம்பிலுவில் கிறேற் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவானது கடந்த 2014.12.22ம் திகதி ஞாயிறு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒண்றுகூடல் மண்டபத்தில் தம்பிலுவில் கிறேற் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.R.திரவியராஜ் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் விசேட அதிதியாக மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் கல்வியியல் இணைப்பாளர் திரு.S.ஜெயபாலன் மற்றும் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.S.குணாளன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.V.ஜெயந்தன், திருக்கோவில் வலய முன்பள்ளிகளுக்கான ஒருங்கினைப்பாளர் திரு.S.தர்மபாலன் ஆகியோரும், அதிதிகளாக மேற்பார்வை உத்தியோகத்தர் பொதுசுகாதாரபரிசோதகர் திரு.K.லோகிதகுமார், பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் விருது வழங்கும் விழாவின் போது LKG மற்றும் UKG பிரிவுகளில் ஆங்கிலமொழி மூலமான ஒன்லைன்(ONLINE) பரீட்சையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் விருது மற்றும் சான்றிதழ் வழங்கியும் ஏனைய மாணவர்கள் சான்றிதழ் அத்துடன் மாணவர்களின், பாடசாலையின் செயற்பாடுகளிற்கு ஊக்கமும் ஒத்துளைப்பினையும் வழங்கிய பெற்றோரிற்கு சிறந்த பெற்றோருக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்விகள் சிறப்பாக இடம் பெற்றது.
LKG பிரிவில் மூன்றாம் இடம் S.திரண்யா
LKG பிரிவில் இரண்டாம் இடம் U.சஜந்திகா
LKG பிரிவில் முதலாம் இடம் K.மிருத்திகா
UKG பிரிவில் முதலாம் இடம் J.ஹர்சித்
UKG பிரிவில் இரண்டாம் இடம் K.P.டிலுசாந்
UKG பிரிவில் மூன்றாம் இடம் V.லட்சுமிகா
சிறந்த பெற்றோருக்கான விருது திரு.திருமதி.துசாந்தன்


































