Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் மூன்று மாதங்களாக நிரந்தர பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் இல்லை

திருக்கோவில் பிரதேசத்தின் நிரந்தர பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கடந்த 3 மாதங்களாக இல்லாததனால் பிரதேச மக்கள் தமது அன்றாடைத் தேவைகளை பூர்த்திச…

Image


திருக்கோவில் பிரதேசத்தின் நிரந்தர பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கடந்த 3 மாதங்களாக இல்லாததனால் பிரதேச மக்கள் தமது அன்றாடைத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் அம்பாரை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ரி.கலையரசனிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.,கோபலரெத்தினம் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்குவரும்வரையில் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் இதேவேளை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய வே.நவீதரன்; ஜனவரி 15 ம் திகதி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் இவ் பிரதேச செயலாளராக காரைதீவு பிரதேச செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன்; திட்டமிட்ல் பணிப்பாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.


இருந்த போதும்; இப் பிரதேசம் 50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டதுடன் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும் இங்கு பல அபிவிருத்திகள் செய்ய வேண்டியுள்ளதுடன் மக்களின் அன்றாடத் தேவைகள் அதிகமாகவுள்ள இப் பிரதேசத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கிழமையில் ஒரிரு தினங்கள் மட்டுமே இங்கு வருகைதருகின்றபோது மக்களின் தேவைகளை பூர்திசெய்யமுடியாமல் உள்ளதுடன் நிரந்தர அதிகாரி இல்லாததனால் மக்கள் தினமும் பிரதேச செயலகத்திற்கு அலைந்துதிரியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் முன்னிருந்த பிரதேச செயலாளரை இடமாற்றி 3 மாதங்களாகியும் நிரந்தர பிரதேச செயலாளரை இதுவரை நியமிக்கவில்லை அதேபோன்று திட்டமிடல் பணிப்பாளர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் இவருக்கு பதிலாக நிரந்தர திட்டமிடல் பணிப்பாளரை இதுவரை அரசு, மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படாதது ஏன்?
தமிழர் பிரதேசம் என்பதால் புறக்கணிப்பா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும் இப்; பிரதேசதத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அன்றாடதேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் தினமும் மக்கள் பல்வேறு அளெகரியங்களை எதிர் நோக்கிவருகின்றதுடன் இப் பிரதேசத்திற்கான நிரந்தர பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளரை நியமித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எனவே இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரை அம்பாரை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி;.கலையரசன் விரைவில் சந்தித்து நிரந்தர
பிரதேசசெயலாளர் மற்றும் திட்டமிடல் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்

You may like these posts