Contact Form

Name

Email *

Message *

கஞ்சிக்குடியாறு வயல் பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல்போயுள்ளார்.

திருக்கோவில் கஞ்சிக்குடியாறு வயல் பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாடு மேய்க்கச் சென்ற 54 வயதுடையவர் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் காணாமல்போயுள்ளார்…

Image
திருக்கோவில் கஞ்சிக்குடியாறு வயல் பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாடு மேய்க்கச் சென்ற 54 வயதுடையவர் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் காணாமல்போயுள்ளார்.

இந்த நிலையில் அவர் அணிந்திருந்த சாரம், மேலாடை, பாதணி, வெத்தலைப் பை என்பன வேப்பையடி குளக்கட்டில் மீட்கப்பட்டுள்ளன.



அவரை குளத்தில் தேடும்பணி கடற்படையின் உதவியுடன் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்று வருவதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு தம்பிலுவில் 2 பிரிவு ஆலையடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய பரநிரூபசிங்கம் பாக்கியராஜா என்பவரே காணாமல் போயுள்ளார்.

இவர் வீட்டில் இருந்து கஞ்சிக்குடியாறு பிரதேசத்தில் உள்ள அவரின் எருமை மாட்டுப்பட்டிக்கு சென்று மாடுகளை மேச்சலுக்கு கொண்டுசென்று பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பிவருவார்.

இந்நிலையில் செவ்வய்கிழமை மாலையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர் அவரை தேடியபோதும் அவரை காணவில்லை. இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிசார் மற்றும் உறவினர்கள் நேற்று புதன்கிழமை காலை தேடியபோது கஞ்சிக்குடியாறு வேப்பையடி குளக்கட்டில் அவர் அணிந்திருந்த சாரம், மேல்சட்டை பாதணி, வெத்தலைப்பை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியிருக்கலாம் அல்லது முதலை கொண்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாணமை கடற்படையின் உதவியுடன் குளத்தில் தேடுதல் இடம் பெற்றுவருகின்றது.

அதேவேளை இவ் பிரதேசத்தை அண்டிய காடுகளிலும் தேடுதல் இடம்பெற்று வருகின்றது என பொலிசார் தெரிவித்தனர். 

You may like these posts