(R.sayan)பொலிஸ் திணைக்களத்தினால் ஆறு மாதங்களுக்கு ஒருதடவை நடத்தப்படும் பரிசோதனைகள் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது
அம்பாறை SSP எம்.எச்.கே.பி மாகெதர பரிசோதனையை மேற்கொண்டார்.
அணிவகுப்புப் பரிசோதனையின் பின்பு வாகனங்கள்,மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், மற்றும் பொலிஸ் கட்டிடம் என்பன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசோதிக்கப்பட்டன.
நிலையத்தின் பொறுப்பதிகாரி திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் மற்றும் திருக்கோவில் பொலிசார் பங்கேற்றனர்
பொலிஸ் பரிசோதனை முடிவில் பொலிஸ் சேவைத் தராதரங்கள் பற்றிய விளக்கமும் வினைத்திறனுள்ள நட்புறவுடனான பொலிஸ் சேவை பற்றியும் பொலிஸாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.





















