Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் சந்தையில் மனித நுகர்வுக்கு பயன்படுத்த முடியாத 48 கோழிகளை கைப்பற்றி அழிப்பு

(அபிவரன்) திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் பொது சந்தையில் மனித நுகர்வுக்கு பயன்படுத்த முடியாத  முட்டையிட்டு மிக வயது முதிர்ந்த(காலம் கடந்த) 48; கோழிகளை  நேற்று ஞாயிற்றுக்கிழ…

Image
(அபிவரன்)
திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் பொது சந்தையில் மனித நுகர்வுக்கு பயன்படுத்த முடியாத  முட்டையிட்டு மிக வயது முதிர்ந்த(காலம் கடந்த) 48; கோழிகளை  நேற்று ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டபோது அவற்றை பொது சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் சுகாதார வைத்திய பணிப்பாளர் அமரசேன உதயசூரியா தெரிவித்தார்
இவ் வாராந்த சந்தை ஞாயிற்றுக்pழமை  வழமைபோல கோழிகள் விற்பனை செய்யப்பட்டபோது  பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர் ஏ.உதயசூரியா தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க. லோகிதகுமார், சுகாதார உத்தியோகத்தர் கே.சசிதரன்  ஆகியோர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மனித நுகர்வுக்கு பயன்படுத்த முடியாத கோழிகளை விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரி ஒருவரிடம் இருந்து 48 கோழிகளை கைப்பற்றப்பட்டு உடனடியாக அவற்றை அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்




You may like these posts