(Sayan & Kajan ) திருவெம்பாவையின் ஆறாம் நாளான இன்று பிட்டிற்கு மண் சுமக்கும் நிகழ்வு தம்பிலுவில் சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது .வீடியோக்கள் விரைவில் பதிவேற்றப்படும்
திருவாதவூரடிகளின் பெருமையைப் பாண்டியனுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், வைகையில் வெள்ளம் கரை புரண்டோடச் செய்தார். அந்நிலையில், வீட்டுக்கு ஒருவர் கரையைப் பலப்படுத்த வருமாறு பாண்டிய மன்னன் உத்தரவிட்டான். இந்த நிலையில் பிட்டு விற்றுப் பிழைக்கும் சிவபக்தையான வந்தியக்கிழவிக்கு ஆள் இல்லாத நிலையில், சிவபெருமானே கூலி ஆளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்துள்ளார். அப்போது அவர் கரையை அடைக்கும் பணியைச் செய்யாமல் படுத்துக்கிடந்தாதால், மன்னன் கூலியாளாக வந்த சிவபெருமானை பிரம்பால் அடித்ததாகவும், அந்த அடியின் வலியை உலகில் உள்ள அனைவரும் உணர்ந்ததாகவும், இதையடுத்து சிவபெருமானை மன்னன் வணங்கி நின்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.





















