தம்பிலுவில் மற்றும் அக்கரைப்பற்று கிறேட் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும், விடுகைவிழாவும் ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் கடந்த 2013.12.07 சனிக்கிழமை காலை 9.00மணியளவில் தம்பிலுவில் கிறேட் பாலர் பாடசாலையின் அதிபரான திரு.R.திரவியராஜ் மற்றும் அக்கரைப்பற்று கிறேட் பாலர் பாடசாலையின் அதிபரான திரு.R.கோகுலராஜ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இன்நிகழ்வின் போது பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச பிரதேசசெயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம், மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச பிரதேசசெயலாளர் திரு.V.ஜெகதீசன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக ஆலயடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.V.குணாளன், திருக்கோவில் பிரதேச பிரதேசதிட்டமிடல் உத்தியோகத்தர் திரு.V.நவிதரன், திருக்கோவில் வலயத்தின் முன்பள்ளிகளுக்கான பொறுப்பாசிரியர் திரு.K.தர்மபாலன், திருக்கோவில் வலயத்தின் முன்பள்ளிகளுக்கான ஆசிரியஆலோசகரான திரு.P.K.சிவசர்மா ஆகியோரும். ஏனைய அதிதிகளாக திருக்கோவில் பிரதேச கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு.K.இராஜரெத்தினம், மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.Y.யுஜீந்திரன், திருக்கோவில் பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.K.ஜினிதா, திரு.V.திவ்யமூர்த்தி, திருக்கோவில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும், ஆலயடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் மற்றும் கிறேட் கல்லூரியின் ஆசிரியர்கள், கிறேட் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் போது கிறேட் பாலர் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்வுகளும், கிறேட் பாலர் பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெறும் ON LINE பரீட்சையில் UKG (4-5 வயது), LKG (3-4 வயது) பிரிவுகளில் 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் விருது மற்றும் சான்றிதழ் வழங்கியும், ஏனைய மாணவர்கள் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கிறேட் பாலர் பாடசாலையின் செயற்பாடுகளிலும், ஏனைய பாட, இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்பட்ட பெற்றோரொருவரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
LKG பிரிவில் 1ம் இடம் T.அக்சிதா
LKG பிரிவில் 2ம் இடம் V.லட்சுமிகா
LKG பிரிவில் 3ம் இடம் R.சகிம்சயா
UKG பிரிவில் 1ம் இடம் K.நிதுர்யனி
UKG பிரிவில் 2ம் இடம் V.அகருயா
UKG பிரிவில் 3ம் இடம் S.லிதுசான்
சிறப்பாக செயற்பட்ட பெற்றோருக்கான விருது
திருமதி.U.விஜயநாதன்





































