(அபிவரன்)திருக்கோவில் தம்பிலுவில் பிரதான வீதியல்; இராணுவ ரக்வண்டி துவிச்சக்கரவண்டி மோதி வீதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ ரக்வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் நோக்கிச் சென்ற இராணுவரக் வண்டி திருக்கோவிலில் இருந்து தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள தனது வீடு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தம்பிலுவில் முனையூர் சந்தியில் திரும்புகையில் இராணுவரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளான 65 வயதுடைய முதியவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இராணுவரக் வண்டி சாரதியை கைதுசெய்ததுடன் ரக்வண்டியை; எடுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இராணுவ ரக்வண்டி சாரதயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.