தம்பிலுவில்,திருக்கோவில் இணையத்தளம் வெறுமனே வெறிச்சோடிக்
கிடக்கின்றன.செய்திகளோ,தகவல்களோ,மிக அரிதாகவே வெளிவருகிறது.
அண்மையில் நடந்த திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில்
தீர்த்த உற்சவத்தின்போது எந்தவித செயற்பாடும் இந்த இணையத்தளம்
மேற்கொள்ளவில்லை.இது புலத்தில் வாழும் எமது மக்களுக்கு பெரிய
ஏமாற்றத்தை தந்தது. இது பற்றி என்னுடன் பலர் பேசினார்கள்.சென்ற வருடம்
இந்த இணையத்தளத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக உதவியவர்களும்
இதில் அடங்குவர்.கடந்த காலங்களில் நல்ல சேவையை செய்துவந்த இந்த
இணையத்தளம் ஏன் சோடைபோனது என்ற கேள்வி எழுகின்றது.
ஊரிலிருந்துதான் செய்திகள்,ஆக்கங்கள்,புகைப்படங்கள் மற்றும் தகவல்கள்
சேகரிக்கப்பட்டு,தொகுக்கப்பட்டு இந்த தளத்தில் அவை பிரசுரிக்கப் படவேண்டும். இதற்கான அனுமதியை ஏலவே இந்த இணையத் தளத்தின்
உத்தியோகத்தர்கள் அங்குள்ள செய்தியாளர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் ஒருவாரம்,இரண்டுவாரம் கடந்தும் ஒரு செய்திகளும்
இந்த தளத்தில் இடம்பெறவில்லை.நான் லண்டனிலிருந்து அறிவித்த
உகந்தை மலை வண்ணக்கரின் மரண அறிவித்தலை தவிர.
வெறுமனே வெறிச்சோடிக் கிடக்கும் இந்த இணையத் தளத்தை பார்க்கும்
பலர் வெறுப்படைகின்றார்கள்.செய்தியாளர்கள் வதனப் புத்தகத்துக்கு
கொடுக்கும்,அல்லது எடுக்கும் நேரத்தில் ஒரு பகுதியை எமது ஊர்களுக்கான
இந்த இணையத்தளத்திற்கு கொடுக்கலாமே என்றும் ஒருசிலர் பேசிக்கொள்கிறார்கள்.
சென்ற வருடம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட திருக்கோவில் முருகன்
தீர்தோற்சவம் இம்முறை செய்யப்படவில்ல.இன்று காலையில் முகப்புத்தகத்தில் ஒரு தகவல்..."பூங்காவனம்..இன்று ஒளிபரப்பு செய்யப்படும்"
ஏன் நேற்று இந்த ஒளிபரப்பு செய்யப்படவில்லை, என்ற கேள்வியை கேட்க
முடியாது.காரணம் இது பொதுப்பணி யாக செய்யும் வேலை.யாரும் விரும்பினால்தான் செய்யமுடியும்.ஆகவே தயவு செய்து இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் இதற்கான பொறுப்பை ஏற்று பதில் தருவார்களா?
இதை நான் ஏன் இங்கே எழுதுகின்றேன் என்றால் இந்த இணையத்தளத்தின்
வளர்ச்சியில் எனக்கும் பங்கிருக்கிறது. இந்த தளத்தில் எழுதும் அனுமதியும்
எனக்கு நிர்வாகம் தந்திருக்கிறது. தயவு செய்து எல்லோருக்கும் திருப்தி
அளிக்கும் வகையில் பதில்தாருங்கள்.
