திருக்கோவில் கஞ்சிக்குடியாறு ரூபஸ் குளம் 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை சுவாட் நிறுவனத்தின் தலைவர் வ. பரமசிங்கம் தலைமையில் திறந்து வைத்து கையளிக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பு பணிப்பாளர் லதன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்,பிரதேச சபை தவிசாளர் வி. புவிராஜன் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் ஒக்ஸ்பாம் நிறுவன அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக சுமார் 30 வருடங்களாக இக் குளம் புனரமைப்பு மேற்கொள்ளப்படாமையால் பல வயல் நிலங்கள் நெற்செய்கை பண்ணப்படாமல் இருந்தன. இந்நிலையில் இதனை புனரமைப்பு செய்வது தொடர்பாக விவசாய அமைப்புக்களால் அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பிற்கு (சுவாட்) கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக் கோரிக்கையை ஏற்று சுவாட் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் ஒக்ஸ்பாம் நிறுவன அனுசரணையுடன் நீர்ப்பாசன திணைக்கள வழிகாட்டலுடன் ஈயூ ஏகப் எனும் திட்டத்தின் ஊடாக 30 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.