அக்கரைப்பற்றில் வெற்றிச் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் கிரேற் பாலர் பாடசாலையானது கொங்ஹொங் நாட்டின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பிய Educatoinal Technologies limited (ETL) உடன் இணைந்து மல்ட்டி மீடியா தொழில்நுட்பத்துடனான நவீன கற்பித்தல் நடவடிக்கையுடனான கிரேற் பாலர் பாடசாலையின் முதலாவது கிளையை தம்பிலுவில்-02, தம்பிமுத்து வீதியில் அமைந்துள்ள திருநாவுக்கரசு நாயனார் குருகுல பிரதான காரியாலயத்தில் நேற்று காலை திறந்துவைத்தது. இன் நிகழ்வானது கிரேற் பாலர் பாடசாலை, கிரேற் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் வெல்லாவெளி உதவி பிரதேச செயலாளருமாகிய திரு.R.திரவிஜராஜ் தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வின் போது பிரதம விருந்தினர்களாகக் திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம், திருக்கோவில் பிரதேச வலையக்கல்விப் பணிப்பாளர் திரு. சுகிர்தராஜன், திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி திரு.V.நவிதரன், திருக்கோவில் பிரதேச கோட்டைக் கல்வி அதிகாரி திரு,S.தவராஜா, ஆலையடிவேம்பு பிரதேச கோட்டைக் கல்வி அதிகாரி திரு..குணாளன், திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், தம்பிலுவில் மத்திய மகா வித்தியால அதிபர் திரு.S.இரவீந்திரன், , தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபரும், திருநாவுக்கரசு நாயனார் குருகுல செயலால்ருமான திரு.பா.சந்திரேஸ்வரன் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
















