திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு மீள் எழுச்சிபெறவுள்ள பகுதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் அடங்கிய குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாமம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம்செய்த அமைச்சர் விஜயம் குழுவினர் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.
மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினரே இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன்போது அப்பகுதிகளில் சுய விருப்பின் பேரில் குடியேறியுள்ள மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அவர்களின் தொழில்துறை மற்றும் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர்கள் மிக விரைவில் குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப்பணிகள் குறித்தும் அப்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் திருக்கோவில் பகுதியில் தற்போது தற்காலிகமாக தங்கியுள்ள தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு பிரதேச மக்களின் பிரதேசங்களையும் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் கோபாலரட்னம், திணைக்களத்தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது அப்பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டன.
மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர்கள் அவற்றினை ஏனைய அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்ததுடன் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட்டன.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!