கடந்த 2011 டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள், இன்று 2012/03/26 திங்கள் காலை வெளியாகின. இப்பெறுபேறுகளின் அடிப்படையில், நமது பிரதேசத்தில், இம்முறை பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக அறியமுடிகிறது.தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன்.சுப்பிரமணியம் தனீஸ், சகல பாடங்களிலும் அதிவிசேட சித்தியுடன், 9A , செல்வன் தட்சணாமூர்த்தி மோகன் லால் 8A 1 B பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்
அதே பாடசாலையில் ஆங்கில ஊடகத்தில் (English Medium) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், செல்வி.மனோகரன் துஷாலினி, 7A 2B பெறுபேற்றைப் பெற்று முதலிடம் வகிக்கிறார்.
திருக்கோவில் மெ.மி.த.க பாடசாலையில், சிறந்த பெறுபேறாக, செல்வன்.கந்தசாமி அனோக்சன், 6A 2B 1C பெறுபேற்றைப் பெற்றுள்ளார். இன்னும் பல சிறந்த பெறுபேறுகளை அறியக்கூடியதாக இருக்கிறது. அவை விரைவில் இற்றைப்படுத்தப்படும்(update).
அறியக்கிடைக்கும் ஏனைய பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை, பெருமளவு மாணவர்கள் சிறப்பாக சித்தியெய்தியுள்ளனர் என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும், இலகுவான பாடங்களில் கோட்டைவிட்ட மாணவர்கள் சிலர், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் “A” தரச் சித்தியைப் பெற்றுள்ளமையையும் அவதானிக்கமுடிகிறது.
குறைந்தவளங்களின் துணையுடன் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் கல்விகற்கும் நமது பிரதேச மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகள், வசதி வாய்ப்புகள் நிறைந்த நகர்ப்புறங்களில் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்களின் பெறுபேறுகளை விட சிறப்பானதாகக் காணப்படுகின்றமை, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயம்!
இந்நிலை தொடரவேண்டும்! சா/தரப் பரீட்சையில் சாதனை படைத்த இம்மாணவச் செல்வங்கள் உயர்தரப் பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று, தம் எதிர்காலக் கனவுகளை நனவாக்கவேண்டுமென்று எம் உள்ளம்நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்!உங்களுக்குத் தெரிந்த, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், இங்கே கருத்துரை(Comment)யில் வாழ்த்துக் கூறலாம்.
---

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!