-அம்பாறை மாவட்ட நிருபர்கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் திருக்கோவில் பிதேசத்தில்
யுத்ததினால் இடம்பெயர்ந்த தங்கவேலாயுதபுரம், கஞ்சிக்குடியாறு பிரதேசங்களில்
மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்
விவசாய பயிர் நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு விவசாகளுக்கான நீர் இறைக்கும் இயந்திரம் முட்கம்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாகாண விவசாய திணைக்கள பிரதேச விவசாய போதனாசிரியர் எம்.கோகுலராஜன்; தலைமையில் நடைபெற்றது
இவ் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண விவசாய கால்நடை
அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா, அம்பாறை மாவட்ட பிரதி
விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன், அமைச்சின் பொதுசன தொடர்பு
உத்தியோகத்தர் எஸ்.நந்தன், அமைச்சின் பிரத்தியோகச் செயலாளர்
ந.செந்தீபன், வி.ராமகிருஷ;ணா, கஞ்சிக்குடியாறு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி
விதானகே, கப்டன் சாந்தலால் பொத்துவில் லாவுகல பிரதேச விவசாய
உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.பாஹிம் ஆகியோர் கலந்து கொண்டு 19 விவசாயக்
குழுக்கழுக்கு இவ் விவசாய உபகரணங்களை வழங்கி வைத்தனர்






Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!