அம்பாறை மாவட்டத்திலுள்ள சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்திற்குள் நுழைந்த யானையொன்று ஆலயத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலய வளாகத்திற்குள் நுழைந்த யானை ஆலயத்தின் பின்பகுதி அறைக் கதவுகளை உடைத்ததுடன், அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களிலும் ஆலய வளாகத்திற்குள் யானைகள் நுழைந்து அங்குள்ள கட்டிடங்களைச் சேதப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!