Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலை சேர்ந்தவர் நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு பரிதாப மரணம்

By - R.Sayan தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட…

Image
By - R.Sayan
தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டர் .
மிகவும் பரிதாபமான சம்பவம் ..

இந்த சம்பவம் தொடர்பாக நாம் கொத்மலை பொலிசாரை தொடர்புகொண்டோம் .. அவர்கள் எமக்கு சில தகவல்களை வழங்கியிருந்தனர்
மேலும் இது சம்பந்தமாக ஒருவர் பிடிக்கப்படதகவும் இது பற்றிய முழு தகவலையும் மின்னஞ்சலில் எமது தளத்திற்கு அனுப்பவதாகவும் பொலிஸ் அதிகாரி முனசிங்க தெரிவித்தார்

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது :

தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் .இவர் வெள்ளவத்தையிலுள்ள வாகன உரிமையாளரிடம் சாதியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த மூன்றாம் திகதி மாலை 3 மணியளவில் சுவிஸ் மற்றும் சவூதி ஆகிய நாடுகளிலிருந்து வந்த இருவருடன் தான் கதிர்காமம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
எனினும், வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்காததையடுத்து வாகன உரிமையாளர் வெள்ளவத்தை பொலிஸில் இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.
கண்டி – நுவரெலியா வீதியில் மீட்கப்பட்ட கழுத்து வெட்டி கொலை செய்யப் பட்ட நிலையில் சடலம் தொடர்பாக தகவல் கிடைக்கவே மேற்படி வாகனத்தின் உரிமையாளரும் சாரதியின் நண்பர்கள் சிலரும் நாவலப்பிட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். இதன்போது சடலம் மேற்படி வாகன உரிமையாளரால் தேடப்பட்ட சாரதி கமலராஜ் என்பவரது என்று உறுதி செய்யப்பட்டது.
மேற்படி சடலம் கடந்த 4 ஆம் திகதி காலை கண்டி – நுவரெலியா வீதியோரமாகவுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அருகிலிருந்து கொத்மலை பொலிஸாரால் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதாக பிரதேச வாசிகள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். எனினும் சடலம் தொடர்பான அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதிருந்ததினால் அடையாளம் காண்பதற்காக பொலிஸார் சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைத்திருந்தனர். முகம் சுற்றிக் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்ட இச்சடலத்தின் கழுத்து வெட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை கடத்திச் செல்லப்பட்ட வாகனம் புதிய ரக வான் ஒன்று என தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தால் ஊரே சோகத்தில் உறைந்து போய் உள்ளது..

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி விரைவில் அறிய தருவோம்
Report By -R.Sayan


தம்பிலுவிலை சேர்ந்தவரை கொலை செய்துவிட்டு கடத்தப்பட்ட வாகனம் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு - http://www.battinews.com/2012/01/blog-post_9287.html


---

You may like these posts