Contact Form

Name

Email *

Message *

ஆழிப்பேரலையால் எம்மை விட்டு பிரிந்த உறவுகளின் 7ம் ஆண்டு நினைவுதினம்

சுனாமி கோரத்தாண்டவமாடி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமி…

Image
சுனாமி கோரத்தாண்டவமாடி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமிக்கடியில் 30 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கடலில் மிகப்பெரிய சுனாமி பேரலை ஏற்பட்டது
லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்,
---------------------------
ஏழு வருடங்களுக்கு முன் எங்கள் எழில் கொஞ்சும் கடற்கரைகளில்
மணல் அள்ளி விளையாடி,கடல் அலையில் கால் நனைத்து,கிளிஞ்சல்கள்
பொறுக்கி,நண்டு பிடித்து",இராவணன் மீசை" என்று சொல்லப்படும் ஒரு
கடல் தாவரத்தையும், "அடம்பன்கொடி"என்று அழைக்கப்படும் ஒரு வகை
படர் தாவரத்தையும் பறித்து விளையாடிய எங்கள் இளம் குழந்தைகளை
"சுனாமி"என்ற பெயரில் வந்த ஆழிப்பேரலை அடித்துக் கொன்றதே..
அதை நினைத்து,அந்தத் துயரத்தில் மூழ்கி,எஞ்சி நின்ற ஒருசில குழந்தைகள் கடலைப் பார்த்து பாடுவதுபோல் ஒருபாடல் எழுதினேன் .
அந்தப்பாடல் நோர்வே நாட்டில் வாழும் சிறுவர்களால் பாடி இறுவெட்டில்
பதியப்பட்டிருந்தது.அதை இங்கே பதிவுசெய்கின்றேன்.ஏழு வருடங்களுக்கு
முன் மரணித்த அந்த சிறார்களை நினைவுகூருமுகமாக இந்தப்பாடல்.

பாடல்:
___________
கடலம்மா..கடலம்மா..கடலம்மா.-பிஞ்சு
உயிரெல்லாம் பலிகொண்டாயே.கடலம்மா
உன் இதயம் என்ன கல்லா அம்மா
உன் இரக்கம் எமக்கு இல்லை அம்மா
என்னம்மா நியாயம் நீ சொல்லம்மா
ஏனம்மா அநியாயம் பதில் கூறம்மா...

உன் கரையில் ஓடித்திரிந்து ...
உன் அலையில் கால்கள் நனைத்து..
உன் மணலைவாரி எடுத்து ...
நாங்கள் வீடுகட்டுவோம்.....
சங்கு சிப்பி பொறுக்கி ..
சரளைக்கற்கள் அடுக்கி....
எங்கும் துள்ளி குதித்து...
பிஞ்சு கைகள் தட்டுவோம்...
அன்பாய்தானே இருந்தாய் ..
அழகாய்தானே சிரித்தாய்
பொங்கி ஏன் நீ எழுந்தாய்
பொல்லாத்தனத்தை புரிந்தாய்...
என்னம்மா நியாயம் நீ சொல்லம்மா
ஏனம்மா அநியாயம் பதில் கூறம்மா...

நீ இரவில் போடும் சத்தம்
எம் ஆனந்தத்தின் உச்சம்...
உன் நுரையில் தெரியும் வெளிச்சம்
ஒருபோதும் இல்லை அச்சம்...
உன் மடியில் விழுந்து படுப்போம் ..
மண் பொந்தில் நண்டு எடுப்போம் ..
உன் அடியில் மூழ்கி எழுவோம் ..
ஒரு சந்தோசத்தில் மிதப்போம் ..
தாயாகத்தானே இருந்தாய்...
சேயாகத்தானே பார்த்தாய்
பேயாக ஏன் நீ மாறி ..
பேரழிவை தந்து சென்றாய்...
என்னம்மா நியாயம் நீ சொல்லம்மா
ஏனம்மா அநியாயம் பதில் கூறம்மா...

கோவிலூர் செல்வராஜன் ---

You may like these posts

Comments