Contact Form

Name

Email *

Message *

புலம்பெயர்ந்த எம் நெஞ்சில் நிதம் இருப்பவன்..

சிதறுண்டு சீமை எல்லாம் நாம் இருந்தாலும் சித்திரவேல் முருகன் புகழ் நாம் மறவோமே.. அல்லல்பட்டு அகிலமெல்லாம் நாம் அலைந்தாலும் அறுமுகனே உன் அருளை நாம் மறவோமே.... திருக்கோவில் …

Image
சிதறுண்டு சீமை எல்லாம் நாம் இருந்தாலும்
சித்திரவேல் முருகன் புகழ் நாம் மறவோமே..
அல்லல்பட்டு அகிலமெல்லாம் நாம் அலைந்தாலும்
அறுமுகனே உன் அருளை நாம் மறவோமே....
திருக்கோவில் பதிவாழும் சித்திரவேல் முருகா..-உன்
திருக்கையின் வேல்கொண்டு நித்தமும் நீ வா வா

எங்கிருந்தபோதும் உன்னை எண்ணிப்பாடுவோம்-உன்
எழில் வடிவை மனத்திரையில் கண்டு ஆடுவோம்..
எங்களுக்கு எல்லாமே நீதான் அய்யா..அய்யா
எப்பொழுதும் எம்முடனே இருப்பாய் அய்யா
திருக்கோவில் பதிவாழும் சித்திரவேல் முருகா..-உன்
திருக்கையின் வேல்கொண்டு நித்தமும் நீ வா வா

எட்டாத தூரத்தில் உந்தன் ஆலயம் முருகா...-எம்
உள்ளமதோ நீ இருக்கும் சின்ன ஆலயம்-அதில்
வற்றாது வாரி அருள் வழங்கிட வா..வா-உன்னை
வடிவாக கண்குளிர பார்த்திட வா..வா..
திருக்கோவில் பதிவாழும் சித்திரவேல் முருகா..-உன்
திருக்கையின் வேல்கொண்டு நித்தமும் நீ வா வா

வெள்ளை நாவல் மரத்தினிலே வந்தமர்ந்தவனே-மனதில்
கொள்ளை ஆசையுடன் நாம் வந்திடுவோமே..உன்
வீதியெல்லாம் வலம்வந்து நாம் விழுவோமே-எம்
விழிகளினால் உனைகண்டு நாம் அழுவோமே..
திருக்கோவில் பதிவாழும் சித்திரவேல் முருகா..-உன்
திருக்கையின் வேல்கொண்டு நித்தமும் நீ வா வா
--கோவிலூர் செல்வராஜன்---

You may like these posts

Comments