By - கோவிலூர் செல்வராஜன் --
திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயமும்,திருச்சபையும் 100 வது ஆண்டு நிறைவை
கொண்டாடும் இந்த வேளையிலே இவ்வாலயத்தின் பழமையையும்,இந்த தேவாலயத்தில்
கிருபையும்,ஆசியும் பெற்ற திருக்கோவில்,தம்பிலுவில் கிறிஸ்தவ பெருமக்களையும்
நான் நினைத்துப்பார்கின்றேன்.இந்த ஆலயத்துக்கு ஊழியம் செய்யவும்,போதிக்கவும் வந்துசென்ற
குருமார்களை நினைவுகூர்கின்றேன். அன்பையும்,கருணையையும்,சாந்தமுள்ள குணத்தையும்,
நல்ல இனிய வார்த்தைகளையும் இவர்களிடமிருந்து நான் கண்டும்,கேட்டுமிருக்கின்றேன்.
எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன.இந்துவோ, இஸ்லாமோ ,கிறிஸ்தவமோ என்ற
வேறுபாடு இன்றி ஒன்றே குலம் ,ஒருவனே தேவன், அன்பே இன்ப மயம் என்று எமது பகுதி மக்கள்
காலம் காலமாக எமது ஊர்களில் வாழ்ந்துவருகின்றார்கள்.அந்தவகையில் 100 ஆண்டுகளை பூர்த்திசெய்து
இருக்கின்ற திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயம் பல சிறப்புகளையும்,வரலாற்றையும் கொண்டதாக
அமைகிறது. திருக்கோவில் திருச்சபைக்கும்,தேவாலய குருவிற்கும், தம்பிலுவில்,திருக்கோவில் கிறிஸ்தவ
மக்களுக்கும் எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையில்,மெதடிஸ்த
ஆலயம் பற்றிய இரு பாடல்களையும் தர விளைகின்றேன்.
பாடல்.1 ..
--------------------
திருக்கோவில் தேவாலயம் ..தேவ
மகன் வாழும் அருளாலயம் ..வாழ்வில்
இருள் நீக்கும் புனிதாலயம்..எங்கள்
மெதடிஸ்த தேவாலயம்..
மேய்ப்பர்தான் எம்மைக் காப்பவர்..
மேன்மையாய் என்றும் பார்ப்பவர் ... (திரு)
பாவங்களை மன்னித்துப் போக்கின்றவர்
இங்கு வாழ்கிறார்...
பாவிகளை ரட்சித்து அருள்கின்றவர்
இங்கு பேசுறார்..
தட்டுங்கள் திறக்குமென்று சொல்கிறார் -இயேசு
தவறாமல் யாவருக்கும் உதவுறார்.. (திரு)
சிலுவையிலே அறைந்தபின்பு மரித்தவர்
இங்கு இருக்கிறார்...
உலகமுய்ய மீண்டும் உயிர்த்தெழுந்தவர்
இங்கு உறைகிறார் ...
கடல் மேலே நடந்து அவர் சென்றவர் -ஒரு
மலைமேலும் நின்று உரை செய்தவர் .. (திரு)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடல் 2 ..
-----------------
மீண்டும் பிறந்துவிடு ...நீ
மீண்டும் பிறந்துவிடு
நூறாண்டு கண்டு நிற்கும்
தேவ ஆலய முன்றலிலே ..உன்
பாவ மூட்டைகளை பறித்து
பாவத்தைக் களைந்துவிடு.... (மீண்டும்)
அன்று எமக்காக கர்த்தர் மரித்தார்
அவர் நமக்காக மீண்டும் உயிர்த்தார்
கல்வாரி மலை சொல்லும் கர்த்தர் கதை -அதை
கண்மூடி தியானித்து அன்பை விதை
ஜீவன் உள்ளவரை தேவனிடம் மன்றாடிடு
பத்துக் கட்டளைகள் சொல்லிச் சொல்லி பண்பாடிடு ..(மீண்டும்)
பூமி நலம் பேண இயேசு பிறந்தார்
பாவி மனம் மாற ரத்தம் சொரிந்தார்
வளமான வாழ்வுக்கு வழி தேடிடு-உன்
விசுவாசம் மேலோங்க அடிகோலிடு
ஞாலம் உள்ளவரை நேசரிடம் அன்பாயிரு
சீலம் கொண்டவனாய் வாழ்ந்து அவர் இடம் சென்றிடு..(மீண்டும்)
திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயமும்,திருச்சபையும் 100 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த வேளையிலே இவ்வாலயத்தின் பழமையையும்,இந்த தேவாலயத்தில்

கோவிலூர் செல்வராஜன் --
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!