By - Malarpriyan அருள்மிக்க உகந்தை முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவமானது 02.07.2011 அன்று காலை 11 மணியளவில் பெருந்திரளான பக்தர்கள் சூழ இனிதே இடம்பெற்றது. அத்தோடு உகந்தை முருகனின் கொடியேற்ற நிகழ்வினை கண்டு தமது கதிர்காம பாதயாத்திரையினை தொடங்கும் நோக்கில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து இம்முறை அதிகளவான இந்து பக்தர்கள் அன்றைய தினம் உகந்தை ஆலயத்திற்கு வருகைதந்திருந்தமையையும் குறிப்பிடத்தக்கது. மேலும் பக்தர்களின், கதிர்காம பாதயாத்திரை, உகந்தை தரிசனம் ஆகியன கருதி உகந்தை வரைக்கும் தொடர்ச்சியான பேருந்து போக்குவரத்து சேவையும் அமைந்துள்ளதோடு, குடிநீர், மருத்துவ, சுற்றாடல் பராமரிப்பு பணிகளும் தொண்டர் நிறுவனங்களினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டவண்ணம் உள்ளன. மேலும் கதிர்காம பாதயாத்திரையினை மேற்கொள்வோரின் நன்மை கருதி அம்பாரை மாவட்ட சிவதொண்டர் அமைப்பு மற்றும் ஹிந்து சேவா சங்கம் போன்ற சமய-சமூக தொண்டு நிறுவனங்களினால் பொதுமக்களின் அனுசரணையுடன் கூமுனை ஆற்றினை மையமாகக் கொண்டு குடிநீர் வினியோகமும், ஏனைய தொண்டுப் பணிகளும் இன்றைய தினம் (03.07.2011) ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

.




Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!