கோமாரி செல்வபுரத்தில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர் குடும்ப சகிதம் சம்பவ தினம் இரவு உறவினர் வீடு ஒன்றிற்கு சென்று இரவு 9.30மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது.
உடனடியாக அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவ இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச. சந்திரகாந்தன் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவியாக பணம் வழங்கியுள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!