Contact Form

Name

Email *

Message *

எமது பிரதேசத்தில் தொடரும் அதிசயங்கள்..!!

கிழக்கு மாகாணத்தில் அடுத்தடுத்து தொடரும் அதிசயங்களினால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இவைகளையிட்டு இன்னும் சிலர் முன்னயதிலும் பார்க்க பயபக…

Image
கிழக்கு மாகாணத்தில் அடுத்தடுத்து தொடரும் அதிசயங்களினால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இவைகளையிட்டு இன்னும் சிலர் முன்னயதிலும் பார்க்க பயபக்தியுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலை எனுமிடத்திலுள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்குள் இருந்து இடையிடையே சலங்கை ஒலிச் சத்தம் கேட்டவண்ணம் இருந்துள்ளது. வருடமொன்றிற்கு ஒருமுறையே திறந்து மூடப்படும் அவ்வாலயத்தின் மூலஸ்தான கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ளிருந்து வரும் சலங்கை ஒலிச் சத்தங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்புடன் கூடிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மக்கள் சாரிசாரியாகச் சென்று அவ் ஒலியைக் கேட்டு பயபக்தியுடன் திரும்பியுள்ளனர். இதேவேளை இம்மாத முற்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலுள்ள காஞ்சிரன்குடா வயற்பகுதியில் வரண்ட மேட்டு நிலப்பகுதியில் திடீரென நீர் ஊற்று ஆரம்பித்துள்ளது. அதனையடுத்து, அப்பகுதியில் சிறிய ஆலயமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திருக்கோவில் பகுதியிலுள்ள மரமொன்றிலிருந்து நுரை நுரையாக பால்வடிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கோமாரிப் பகுதியிலுள்ள ஆலமரமொன்றில் பிள்ளையார் வடிவமும் தோன்றியுள்ளதாம். இவற்றைக் காண தினமும் மக்கள் பெரும் திரள்திரளாக கூடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

You may like these posts

Comments

  1. ennaiya.. kadal kanni videonu pottrukkinga.. but onrayum kaanala..
    prem, eastern university.

    ReplyDelete

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!