Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிகப்படும் இளம் யுவதியொருவர் விசேட புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக…

Image


 அக்கரைப்பற்றில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிகப்படும் இளம் யுவதியொருவர் விசேட புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த யாழ்நதி எனப்படும் தங்கவடிவேல் யுகிர்தா என்ற இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முன்பள்ளி ஆசிரியையாக சேவையாற்றிய இப் பெண் 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும் கடந்த ஏப்ரலில் மாதம் அந்த அமைப்பிலிருந்து விலகி பெற்றோருடன் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை தனது தாயுடன் அம்பாறை வைத்திசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஆட்டோவில் அக்கரைப்பற்று வரை பயணம் செய்து அங்கிருந்து அம்பாறைக்கு தனியார் பஸ் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை ஆலிம் நகர் என்னுமிடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பாக கிடைத்த கவலையடுத்து வாகனமொன்றில் சென்ற பொலிஸார் குறித்த தனியார் பஸ் வண்டியை வழிமறித்து இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக இவரது கைது தொடர்பாகக் கூறப்படுகின்றது.

You may like these posts

Comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!