நன்றி மறப்பது நன்றன்று. இது வள்ளுவர் பெருந்தகையின் வாக்கு. அதனால்தான் உழவர் பெருமக்கள் தமக்கு அன்றாடம் ஒளி வழங்கும் சூரிய பகவானுக்குப் பொங்கல் வைத்துப் படையலிட்டு வழிபட்டு தமது நன்றிக் கடனைச் செலுத்திவருகின்றனர். அந்நன்னாளே பொங்கல் திருநாளாக நானிலம் எங்கும் கொண்டாடப்படுகின்றது.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்நாளில் அதனைப் பற்றி சிறிது அறிந்துகொள்வோமா?
பூமியின் பரப்பை விட 109 மடங்கு பெரிய கண்டமே சூரியன். ஆதியில் மக்கள் சூரியன் தான் உலகைச் சுற்றி வருவதாகக் கருதினர். ஆனால் இது தவறு என்று 16 ஆம் நூற்றாண்டில்தான் சுட்டிக் காட்டப்பட்டது. அவ்வாறு சுட்டிக் காட்டியவர் நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பாரே ஆவார்.
சூரியன் நிலையாக ஓரிடத்தில் இருக்கும் கண்டம் என்றும் பூமிதான் சூரியனைச் சுற்றி வலம் வருவதாகவும் அஎர் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார். இதில் இன்னுமொரு விசேடம் என்ன தெரியுமா? சூரியனின் ஈர்ப்பு விசையால்தான் பூமி தனது சுற்றுப் பாதையில் வலம் வருகிறது என்பதுதான்.
வெளிநாடுகளில் சூரியன் தெய்வமாக இன்றும் வணங்கப்பட்டு வருகின்றது. சூரிய தெய்வம் பல பெயர்களில் அழைக்கப்படு கின்றது. எகிப்தில் ஆமன்-ரா, கிரீஸில் போபஸ் அப்பல்லோ, ஈரானில் முத்ரா என்று பல பெயர்களில் சூரிய தெய்வம் அழைக்கப்படுகின்றது.
தை பிறந்தால் வழி பிறக்கும என்பார்கள். காலங்காலமாக நம் முன்னோர்களும் இதைத்தான் நமக்குச் சொல்லித் தந்தார்கள். நாமும் அதையே நம்பிக் கொண்டிருக்கின்றோம். இனிமேலும் நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை?
இம்முறையாவது தை பிறந்து மக்களுக்கு நல்வழியைத் தேடித் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரதும் பிரார்த்தனையாக ஆவலாக உள்ளது.நாட்டில் நிலவும் யுத்த சூழல் மறைந்து, தமிழ் மக்கள் அனைவரும் நிரந்தர சாந்தி சமாதானம், நீடித்த ஒற்றுமையுடன் வாழ வழி கிட்டட்டும்.
Comments
same to u
ReplyDeletethanks for your deatials thambiluvil supethan
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!