இவ் விஷேட கூட்டத்தில் பிரதேச செயலக உதவி செயலாளர் சதீஷ், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.டபிள்யூ. கமலராஜன், திருக்கோவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி S.S. ஜயவீர, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரசாத் மெண்டிஸ் அப்பு, சிரேஷ்ட கிராம சேவைகள் உத்தியோகத்தர் கண. இராஜரெத்தினம், வர்த்தக சங்க தலைவர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
- மக்கள் ஒன்றாகக் கூடி அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முகமாக திருக்கோவில் மத்திய சந்தையில் உள்ள பொருட்களை 5 இடங்களுக்கு மாற்றம் செய்தல். திருக்கோவில் வைத்தியசாலைக்கு முன் உள்ள விளையாடு மைதானம், ஆதவன் விளையாட்டு மைதானம், தம்பிலுவில் அம்மன் கோவில் வீதி, விநாயகர் விளையாட்டு கழக மைதானம், மண்டானை ஆகிய பிரதேசங்களில் குறித்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
- திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்கனவே மீன்பிடி, விவசாய தேவைகளுக்கு வழங்கப்பட்ட Pass தொடர்ந்தும் செல்லுபடியானதாக இருக்கும்.
- புகையிலை, சாராயம், கசிப்பு போன்றவற்றின் விற்பனையை முற்றாக தடை செய்தல், இதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்.
- திருக்கோவில் பிரதேசத்தினுள் உள்நுழைவோர், திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து வெளியேறுவோர் ஆகியோரின் தகவல்களை பதிவு செய்தல்.
- ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் ஒரு குடும்பத்தில் ஒரு நபரை மாத்திரம் வெளியே செல்ல அனுமதிக்கும் வகையில் Pass வழங்குதல்.