
(வ.டினேஸ்)
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் முப்படையினர் ஊடாக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந் நிலையில் கடந்த 20 வெள்ளிக்கிழமை அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நேற்று தளர்த்தப்பட்டு மீண்டும் நேற்று மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அம்பாரை மாவட்டம் முற்றாக ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறதைனை அவதானிக்க கூடியதாக உள்ளது ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று காரைதீவு, கல்முனை உள்ளி்ட அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் பிரதேசங்களில் முப்படையினருடன் பொலிசாரும் இணைந்து கடமை புரிகின்றனர்.
ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்களுக்கு எதிராக பொலிசார் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் தகுந்த காரணங்கள் இல்லாமல் வீதியில் வருபவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளர்.
மக்கள் தகுந்த காரணங்கள் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பொலிசாரால் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது










