இலங்கை நிருவாகசேவையின் தரம் 3 (SLAS) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கடந்த வருடம் 2017ல் நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் பெறுபேறுகள் கடந்த 07.11.2018 அன்று வெளியாகியிருந்தது இப் பரீட்சையில் சித்திபெற்ற 220 பேருக்கும் நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. இதன் அடிப்படையில் போட்டிப்பரீட்சையில் தெரிவாகி தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையிலும் சித்தி பெற்று இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகாக விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை தம்பிலுவில் அருணோதயா மற்றும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலத்தில் கற்றுக் கொண்டதுடன் தனது இடைநிலைக் கல்வியை தம்பிலுவில் தேசிய கல்லூரிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசானவியல் துறையிலும் 2017ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு முதல் கிழக்கு பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானப் பீடத்தில் செயல் விளக்குனராக இருந்து வரும் நிலையில் தற்போது இலங்கை நிர்வாக சேவைப் அதிகாரியாக தெரிவு செய்ப்பட்டுள்ளார்.
இதேவேளை விவேகானந்தராஜா துலாஞ்சனன் கல்வித் துறையில் மாத்திரமன்றி பாடசாலை காலம் முதல் இலக்கிய துறையில் ஆராய்வு ரீதியான கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் அண்மையில் 'அலகிலா ஆடல்' எனும் சைவத்தின் கதை எனும் ஆய்வு நூல் ஒன்றினையும் வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) இணையக்குழுவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.